logo

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீராங்கனைக்கு நிதி உதவி வழங்கி வாழ்த்தினார்

தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனையான தங்கை நவ்ஷீன் பானு சந்த் வரும் மே மாதம் 29 ம் தேதி நடைபெற உள்ள 71 வது டென்சிங் ஹிலாரி மவுண்ட் எவரெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கான உதவிகள் வேண்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு ஆன்லைன் மூலம் நவ்ஷீன் பானு சந்த் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த சிறப்புக்குரிய போட்டியில் தங்கை நவ்ஷீன் பங்கேற்றிடும் வகையில், கோவையில் இன்று நடைப்பெற்ற அரசு நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து ரூ.5.25 லட்சத்திற்கான காசோலையை அவருக்கு வழங்கி போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தர தங்கை ‘வீராங்கனை நவ்ஷீனை’ வாழ்த்தினார், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

18
2010 views